இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வர இருக்கிறது- ராகுல் காந்தி..!!!

இந்திய பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கிடையே உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்தியாவை கதிகலங்க வைத்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 130 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே கொரோனா மற்றும் பொருளாதார சீரழிவால் இந்தியாவில் சுனாமி போன்ற பேரழிவு வந்து கொண்டு இருப்பதாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
வர இருக்கும் கொரோனாவுடன் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் 6 மாதங்களில் மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையை அனுபவிக்க போகிறார்கள்.
கொரோனா மற்றும் பொருளாதார அழிவால் இந்தியாவில் சுனாமி போன்ற பேரழிவு வந்துகொண்டு இருக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.