;
Athirady Tamil News

மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!!

0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளவர்களில் அடையாளப்படுத்தப்பட்டவர்களை அவர்களின் வீடுகளின் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு பொலிஸாரை ஈடுபடுத்தவும், ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு விசேட ஆலோசனை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர் , இராணுவத்தளபதி,பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர் , சுகாதார அமைச்சர் ,மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், மற்றும் தொழிந்துறை வல்லுணர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள். இதன் போதே ஜனாதிபதி தனது தீர்மானங்களை அறிவித்தார். இதன் பின்னர் பல்வேறு தரப்பினரது கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

சுகாதார அமைச்சர்- கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு ள்ளது. ஆனால்அன்றாடம் கூலி தொழில் செய்து வாழும் நடுத்தர மக்கள் ஒருபுறம் பாதிக்கப்படுகின்றார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்.

ஜனாதிபதி- இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவமாறு தொடர்புடைய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். அரச அதிகாரிகள் கடமைகளை சரிவர செய்வது அவசியமாகும்.

பாதுகாப்பு செயலாளர்- மார்ச் மாதம் 1ம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை தென்கொரியா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 3000ம் பேர் நாட்டுக்குள் வந்துள்ளார்கள்.

இவர்களில் 1500பேர் இதுவரையில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலுக்கு அமைய அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு வந்தவர்கள் தொடர்பில் அறிவிக்க பொது மக்கள் மத்தியில் 119 என்ற தொலைப்பேசி இலக்கத்தை அறிமுகம் செய்தோம். இதுவரையில் சுமார் 400ற்கும் அதிகமான தகவல்கள் கிடைககப் பெற்றுள்ளன.

ஜனாதிபதி- அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமல்ல அந்த 3000ம் பேர் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும். அடையாளப்படுத்தப்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துங்கள். பாதுகாப்புக்கு ஒரு பொலிஸாரை ஈடுப்படுத்துங்கள். அத்துடன் கடமையில் ஈடுப்படும் போது அரச அதிகாரிகளும் பொறுப்புடனும், பொறுமையாகவும் செயற்படுங்கள்.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்- சில வைத்தியசாலைகளில் பற்றாகுறைகள் சேவை வழங்குதலை அடிப்படையாக்க கொண்டு எழுந்துள்ள. நாடு தழுவிய ரீதியில் சிகிச்சை நடவடிக்கைளை முன்னெக்க சுகாதார பரிசோதகர்கள் போதாத நிலை காணப்படுகின்றன.

ஜனாதிபதி- இதுவரையில் சுகாதர பரிசோதனை சேவையினை பூர்த்தி செய்துள்ளவர்களை உடன் சேவையில் இணைத்துக் கொள்ளுங்கள். எந்நிலையிலும் சுகாதார சேவையில் தட்டுப்பாடு நிலவ கூடாது.

வைத்தியர்- தென்கொரியா, மற்றும் இத்தாலிஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் பலர் புத்தளம் பிரதேசத்தில் அதிகளவில் உள்ளார்கள். தற்போது அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சில பிரதேசங்களை முடக்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடியுமா,

மேல்மாகாண ஆளுநர்.- நகரங்களை முடக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் அது மாறுப்பட்ட பிரச்சினையினை ஏற்படுத்தும். பொது மக்கள் தற்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சுயமாகவே தங்களை பரிசோதனை செய்துக் கொள்ள முன்வர வேண்டும்.அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும். தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுவதை முதலில் தவிர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அவரவருக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா! (படங்கள்)

கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!

ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு! (படங்கள்)

அரச நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை!!

இத்தாலியிலிருந்து ஒரு பகிரங்க கடிதம்.!!

கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!

மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!

20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்!!

வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!

கொரோனா வைரஸ் தொற்றை கண்காணிக்கும் காரியாலயங்கள்!!!

மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி!! (வீடியோ)

அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)

13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!

விசேட நிகழ்வுகளை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!!

‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!

கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + nineteen =

*