;
Athirady Tamil News

வேட்புமனுத் தாக்கலின் போது மஸ்தான் – தர்மபால செனவிரட்ன கருத்து மோதல்!! (படங்கள்)

0

பொதுஜன பெரமுன வேட்புமனுத் தாக்கலின் போது மஸ்தான் – தர்மபால செனவிரட்ன கருத்து மோதல்

வன்னித் தேர்தல் தொகுதிககான பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான மஸ்தான் அவர்களுக்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வேட்பாளருமான தர்மபால செனவிரட்ன அவர்களுக்கும் இடையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது,

வேட்மனுவை தாக்கல் செய்வதற்காக வேட்பாளர்களான காதர் மஸ்தான், தர்மபால செனவிரட்ன, ரட்ணப்பரிய பந்து மற்றும் ஆதரவாளர்கள் மாவட்ட செயலக வாயிலுக்கு வருகை தந்தனர். இதன்போது மூவரை மாத்திரமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது முதன்மை வேட்பாளரான மஸ்தான் அவர்கள் வேட்பாளர் ரட்ணப்பிரிய பந்து மற்றும் சட்டத்தரணி ஒருவருடன் மாவட்ட செயலகத்திற்குள் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தன்னை திட்டமிட்டே வெளியில் விட்டதாக தெரிவித்த வேட்பாளர் தர்மபால, ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இதன்போது,

தேர்தலில் போட்டியிடுவதற்காக நாங்கள் நியமித்த உறுப்பினர்களை நீக்கிவிட்டு தனக்கு தேவையானவர்களை மஸ்தான் நியமித்துள்ளார். முதல் எலியாபாய், பிறேம் போன்றவர்களின் பெயர்கள் இருந்தன. சிறந்தவர்களின் பெயர்கள் முன்னர் இருந்தன. அது எல்லாவற்றையும் நீக்கி விட்டு புதியவர்களை நியமித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கூட என்னை விட்டுவிட்டு வேறு நபருடன் உள்ளே சென்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார் என்றார்.

இது தொடர்பில் வேட்பாளர் மஸ்தானிடம் கேட்டபோது, வேட்பாளர் தெரிவு கட்சியினால் இடம்பெற்றது எனக் கூறியதுடன், எந்தப் பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 5 =

*