கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள்: அந்தணர் ஒன்றியம்!!

கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள்:
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நேர பூஜையின் போதும், மாலை நேர இல்ல வழிபாட்டின் போதும் முழு உலகத்தையே அச்சுறுத்தி வருகின்ற கொரனா வைரஸ் நோயில் இருந்து விடுபடவும் பாதிக்கப்பட்டவர்கள் சுகமடையவும் வேண்டி அனைவரையும் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.
குறிப்பாக வவுனியா முகாம்களில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் அதில் இருந்து விடுபட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்வதற்கும் பிரார்திக்குமாறு வேண்டுகின்றோம்.
இந்து ஆலயம் சார்ந்த நிகழ்வுகளை செய்கின்ற ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மதகுருமார் அனைவரும், மக்கள் அதிகமாக பங்கேற்கும் விழாக்களை தற்கால நிலமைக்கு ஏற்பவும் எம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், குறுகிய முறையிலும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!