தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் வேட்புமனுத் தாக்கல்!! (படங்கள்)
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது.
இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
வன்னித் தேர்தல் தொகுதியில் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வினோநோகராதலிங்கம், ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், க.சிவலிங்கம், செ.மயூரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!
அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் – கருணா குற்றச்சாட்டு!!
TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)
TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!