வவுனியாவில் பொதுஜன பெரமுன வேட்புமனுத்தாக்கல்!! (படங்கள்)
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன கட்சி இன்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது.
குறித்த வேட்புமனுவை கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி முதன்மை வேட்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் வேட்பாளருமான கேணல் ரட்ணப்பிரிய பந்து மற்றும் சட்டத்தரணி ஆகியோர் வேட்புமனுவை கையளித்தனர்.
அத்துடன், மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், வேட்பாளருமான தர்மபால செனவிரட்ண மற்றும் ஆதரவாளர்களும் இதன்போது உடன் வந்திருந்தனர்.
இதேவேளை, பொதுஜன பெரமுன சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் காதர் மஸ்தான், தர்மபால செனவிரட்ண, ரட்ணப்பிரிய பந்து, சதாசிவம் கனகரட்ணம், ஜனக நந்தகுமார, பஸிர் ஆமது ஜசார், வெள்ளைச்சாமி மகேந்திரன், செல்வராசா செல்வகுமரன், எஸ்.எம்.பிறேமரட்ண சுமதிபால ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”