“லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்” சேச்சேச்சே.. என்னடா.. புதருக்குள்ள இத்தனை பேரா.. கொரோனாவே வெட்கப்படுதே! (வீடியோ, படங்கள்)

யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.. முக்கியமாக இந்த லவ்வர்ஸ்.. கொரோனா வைரஸைவிட கொடியது இந்த காதல் வைரஸ்தான்.. பார்க்குகளில் முகத்தை மூடிக் கொண்டு ஜோடியாக ஜோடியாக பேசி கொண்டிருக்கிறார்கள்!
தமிழகத்திலும் நுழைந்துள்ள கொரோனா பீதியால் உச்சக்கட்ட பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அதனால் தியேட்டர்கள், நீச்சல்குளம், பார்க்குகள், மால்கள் போன்றவைகளை இழுத்து மூட சொல்லி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதையொட்டி ஏராளமான பூங்காக்கள் மூடப்பட்டு விட்டன.. ஆனால் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்புவரை சென்னை செம்மொழி பூங்காவில் காதல் ஜோடிகள் நிறைந்து வழிந்துள்ளனர்… செம்மொழி பூங்கா முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.
புதர்கள் இது சென்னை அண்ணா சாலையில், ஜெமினி பாலம் கீழே அமைந்துள்ளது. இதற்கு தினமும் நூற்றுக்கணக்கில் மக்களும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு. காலையில் வந்து இங்கு உட்கார்ந்துவிட்டால், சாயங்காலம்வரை பொழுதை கழிப்பார்கள்.. இவர்களுக்கு வசதியாக புதர்களும் மண்டி கிடக்கின்றன. வழக்கமான நேரத்தில்தான் இப்படி என்றால், வைரஸால் நடுங்கி கொண்டிருக்கும் நேரத்திலும் பூங்கா வாசலில் ஜோடிகள் வந்து உட்கார்ந்துள்ளனர்.
வைரஸ் கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் பொதுஇடங்களில் நடமாட்டம் குறைந்துவிட்டது.. ஆனால் காதல் ஜோடிகள் மட்டும் வைரஸை கண்டு நடுங்கவில்லை..
எங்க பவர்புல் காதல் முன்னாடி கொரோனா எல்லாம் எம்மாத்திரம் என்ற ரேஞ்சுக்கு பார்க்கில் பிஸியாக இருந்தனர்.. இதற்கு பிறகுதான் நேற்று உத்தரவு வரவும் பூங்காக்கள் மூடப்பட்டன.. அப்போது ஜோடிகளை செக்யூரிட்டிகள் விரட்டி உள்ளனர்.
பெஞ்சுகள் ஒரு ஜோடி நின்று கொண்டிருந்த காருக்கு பின்னாடியும், மற்றொரு ஜோடி பைக்க நிறுத்திவிட்டும்.. மேலும் பலர் அங்கிருந்த பெஞ்சுகளில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தும் பேசி கொண்டிருந்தனர்.. மேலும் கிட்டத்தட்ட 50-க்கும் ஜோடிகள் புதர் மறைவில் இருந்துள்ளதை பார்த்து பூங்கா ஊழியர்களே மிரண்டு விட்டனராம்.. அவர்கள் எல்லாரையுமே வெளியேற்றினார்கள்.
துப்பட்டா வெளியே வரும்போது ரோமியோக்கள் அசடு வழிய.. பெண்கள் சுடிதார் துப்பட்டாவில் முகத்தை மூடியவாறே வெளியேறினர்… மேலும் சிலர் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் கேஷூவலாக நடந்து வெளியே சென்றனர்… ஆனால் ஒரு சிலர் பார்க்குக்கு வெளியே நின்று கொண்டே காதலை வளர்த்து கொண்டிருந்தனர்.. அதான் காதல் வைரஸ்!!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!
பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!