வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)
வவுனியா நகரசபை பொதுப்பூங்கா கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நகரசபை தவிசாளரின் உத்தரவுக்கு அமைவாக இன்று (18.03.2020) காலை 10.00 மணி முதல் மூடப்பட்டுள்ளது.
உலகம் பூராவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொதுப்பூங்காவும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
நகரசபையின் அறிவுறுத்தலுக்கமைய பொதுப்பூங்கா மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பூங்கா குத்தகையாளரினால் அறிவுத்தல் பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!
பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!