ஒரு மாதத்திற்கு போராட்டமோ ஆர்ப்பாட்டமோ கிடையாது- பாஜக அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அவ்வகையில், ஒரு மாதத்திற்கு போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்துவதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது. இத்தகவலை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
‘பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கட்சி கூட்டத்தில் பேசும்போது, கொரோனா வைரஸ் காரணமாக எந்தவொரு போராட்டத்தையும், தர்ணாவையும், ஆர்ப்பாட்டத்தையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில், அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தவொரு போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பதில்லை என்று பாஜக முடிவு செய்துள்ளது’ என நட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.