6 கட்சிகள் தமது வேட்புமனுவினை யாழ் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளித்தனர்.!! (படங்கள்)
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று புதன்கிழமை 6 கட்சிகள் தமது வேட்புமனுவினை யாழ் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திக் கட்சி ஆகிய கட்சிகளே தங்களது வேட்புமனுக்களை கையளித்திருந்துனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் காலம் நாளை(19) உடன் முடிவடைகின்றது.
இந்நிலையில் 6 அரசியல் கட்சிகள் தமது வேட்புமனுக்களை இன்று புதன்கிழமை காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியின் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளித்திருந்தனர்.
இதன்படி முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலமையில் ஜக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை முதலில் கையளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது முன்னாள பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், தர்மலிங்கம் சித்தாத்தன், ஈ.சரவணபவன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
தொடர்ந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தலமையில் அக் கட்சியின் வேட்புமனுவும் கையளிக்கப்பட்டது. இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனு கையளிக்கப்பட்டிருந்தது.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடக பேச்சாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இறுதியாக சிறிலங்க சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலமையில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் வேட்புமனுத் தாக்கல்!! (படங்கள்)
LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!
அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் – கருணா குற்றச்சாட்டு!!
TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)
TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!