முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கொரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோ காரணமாக இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுப்பி வைக்கப்பட்டார்.
“அவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.
அவருக்கு உரிய முதலாம் கட்ட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது அதன் பின்னரே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!
பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!