;
Athirady Tamil News

கொரோனா அறிகுறியுடன் கேரளாவில் இருந்து ரெயிலில் அசாம் தப்பிச்சென்ற நபர்..!!

0

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், கேரளா மாநிலத்தில் வேலை செய்துவந்த வடமாநிலமான அசாமை சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் பரவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கேரள போலீசார் தப்பிச்சென்ற நபரின் சொந்த ஊரான அசாம் மாநிலம் மொரிஹான் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கேரள போலீசாரின் தகவலையடுத்து கேரளாவில் இருந்து அசாம் வந்த ரெயிலில் சோதனை செய்த ரெயில்வே போலீசார் கொரோனா அறிகுறியுடன் கோழிக்கோடு மருத்துவமனையில் இருந்து தப்பிவந்த நபரை நேற்று நள்ளிரவு நியூ பொங்ஹைஹான் ரெயில் நிலையத்தில் வைத்து பிடித்தனர்.

பிடிபட்ட நபர் உடனடியாக பொங்ஹைஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா குறித்த பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து ரெயில் மூலம் அசாம் சென்ற வடமாநிலத்தவருக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அவருடன் பயணித்த சக பயணிகளுக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவிவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 14 =

*