புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

புத்தளம் நிர்வாக மாவட்டம் முழுவதிலும் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மீளவும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நீர்கொழும்பு பொலிஸ் வலயத்தின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகார பிரிவுக்கும் மீள இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டம் (1954 ஆம் ஆண்டு திருத்தம்) மற்றும் அது சார்ந்த கட்டளைகள் மீறப்படுவதை தடுக்கும் முகமாக ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நேற்று மாலை 4.30 முதல் பிறப்பிக்கப்பட்டுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிவித்திருந்தார்.
இது குறித்த அறிவித்தலை அவர், புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். எனினும் அந்த ஊரடங்கு இன்று காலை 8.00 மணிக்கு அகற்றப்பட்டது. இந் நிலையிலேயே மீள இன்று 2.00 மணிக்கு மீள ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, புத்தளம் நிர்வாக மாவட்டத்தில் புத்தளம் பொலிஸ் வலயத்தில் 11 நிலைய அதிகார பிரிவுகளிலும் , சிலாபம் பொலிஸ் வலயத்தின் 7 பொலிஸ் அதிகார பிரிவுகளிலும் நீர்கொழும்பு பொலிஸ் வலயத்தின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகார பிரிவுகளிலுமாக 19 பொலிஸ் அதிகார பிரிவுகளில் இந்த ஊரடங்கு மறு அறிவித்தல் வரை அமுல் செய்யபப்டுவதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!
பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!