;
Athirady Tamil News

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி 9 ஆயிரத்தை நெருங்கியது..!!

0

உலகம் முழுவதும் 176 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக தற்போது சீனாவுக்கு அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதுவரை கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 967 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 ஆயிரத்து 745 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் நேற்று 8 பேர் உயிரிழந்தனர். அங்கு மொத்தம் 3 ஆயிரத்து 245 பேர் பலியாகி இருக்கிறார்கள். இத்தாலியில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 155 ஆக அதிகரித்தது. புதிதாக 177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக 9 ஆயிரத்து 438 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் 33 பேர் பலியானார்கள். 2 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் நெதர்லாந்தில் 58 பேரும், ஜெர்மனியில் 28 பேரும், ஜப்பானில் 32 பேரும், பெல்ஜியத்தில் 14 பேரும், சுவீடனில் 10 பேரும், இந்தோனேசியாவில் 19 பேரும், ஈராக்கில் 12 பேரும், கிரீஸ், போலந்தில் தலா 5 பேரும், ஆஸ்திரேலியாவில் 6 பேரும், லெபனான், பிரேசிலில் தலா 4 பேரும், கனடாவில் 9 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

மேலும் மலேசியா, போர்ச்சுக்கல், அயர்லாந்து, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பல்கேரியா, அல்பேனியா, மொரோக்கோ, உக்ரைனில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 13 =

*