சிறைக்கைதிகளை பாதுகாக்க முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை!!

கொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்க போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
உலகையே உலுக்கி வரும் கொரோனோ இலங்கையையும் விட்டு வைக்க வில்லை. அதனை கட்டுப்படுத்த எல்லோரும் ஒன்றிணைந்து முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் சிறைச்சாலைகள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. புதிதாக கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் எந்தவித உடல் பரிசோதனைகளும் இல்லாமால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். சிறைச்சாலையில் கைதிகளின் சுகாதாரங்கள் உரியமுறையில் பேணப்படவில்லை.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறையில் வாடுவதனால் நீரழிவு நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த நோய்களினால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலையோ , நிபந்தனைகளின் அடிப்படையிலையோ அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என கோருகின்றோம்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது அரசியல் கைதிகளை மரண தண்டனை கைதிகளோட தடுத்து வைத்திருக்கின்றார். இதனால் அவர்கள் உடல் உள ரீதியாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் எனவே அவர்கள் தொடர்பில் கரிசணை கொண்டு மரண தண்டனை கைதிகளோடு அவர்களை தடுத்து வைக்காது தனியாக தடுத்து வைக்குமாறும் கோரி நிற்கிறோம்.
கொரோனோ தாக்கத்தால் ஈரானில் சிறைக்கைதிகள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!