ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறாக அமையாது!!

ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளை பராமரித்து செல்வதற்கு இடையூறாக அமையாது என அமைச்சரவை இணை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், விசேடமாக சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தனிநபர் பாதுகாப்புக் சேவைகள் , துறைமுகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் ஆகிய சேவைகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏதேனும் அத்தியாவசிய செயற்பாடுகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான அறிக்கை மதியம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது வார இறுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வீடுகளிலிருந்து வெளியேறாமல் தானாகவே தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுமாறும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக புறக்கோட்டை சந்தை இன்று பிற்பகல் 2 மணி வரை திறக்கப்படும் பின்னர் அதனை சுற்றியுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படும் எனவும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மெனிக் சந்தை மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!