மக்களுக்கு அரசாங்கம் உடணடியாக நிவாரணம் வழங்க வேண்டும் கு.சுரேந்திரன்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கின்ற பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு நன்மையினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள அதே வேளை அன்றாட தொழில் செய்யும் மக்களை கருத்திலே கொண்டு அரசாங்கம் உடணடியாக நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குருசாமி சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடையம் தொடர்பில் குருசாமி சுரேந்திரன் லேலும் தெரிவிக்கையில்….
வீட்டுக்குள் இருப்பது, உலாவுவதை மட்டுப்படுத்துவது, கடைகள் அலுவலகங்கள் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுத்துதல் மற்றும் வீட்டிலிருந்தபடியே வேலைசெய்தல், எனும் பல கட்டுப்பாடுகள் அதற்கு மேற்பட்டு ஊரடங்கு சட்டமும் பிரப்பிக்கப்பட்டிருப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாககவே நாங்கள் பார்க்கின்றோம்.
ஆனாலும் எங்களுடைய தமிழ் மக்களிலே 70 வீதத்துக்கும் மேற்பட்டோர் அன்றாட தொழில் தெய்து அதன் மூலமாக வருமானம் ஈட்டுபவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
உதாரணமாக நாள் கூலிக்கு செல்லுவவர்களும், முச்சக்கர வண்டி ஒட்டுபவர்களும், தனியார் பஸ்களிலே வேலை செய்பவர்களும், கடைகளிலே அன்றாட சம்பளத்திற்கு வேலை செய்பவர்களும் மற்றும் சுகாதார தொழிலாளர்களாக நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களே பலர் காணப்படுகின்றார்கள்.
இந்த கட்டுப்பாடுகளினாலே இவர்களுடாய வேலைத்திட்டங்கள், வேலைக்கு செல்லுகின்ற நிலைமை பாதிக்கப்பட்டு வருமானத்திற்கு மிகவும் சிக்கலான சூழலையே எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆகவே மக்களை கருத்திலே கொண்டு அரசாங்கம் உடணடியாக இந்த மக்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
உதாரணமாக ஜனாதிபதியினுடைய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிவாரண பொருளாதார பொதியொன்றை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கின்றது.
அந்த பொதியில் அன்றாடமாக வேலைக்கு வேலைக்கு செல்பவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்கள் சம்பந்தமாக எந்த பொதியிலும் எந்த விதமான தீர்பும் முவைக்கப்படவில்லை என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
இது இந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களினுடைய நிலைமையை மிகவும் கவலைக்கிடமாக நிலைமைக்கு இட்டுச் செல்லுகின்றது.
நிலமை கட்டுக்கு மீறுவதற்கு முன்னர் வர முன் காப்போம் எனும் வகையிலே இந்த மக்களுடைய வறுமைநிலையினால் பட்டினி நிலைக்கு தள்ளப் படுவதற்கு முன்னரே அரசாங்கம் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு மேலதிகமாக இந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு அல்லது வறச்சி நிவாரணம் எனும் திட்டத்தின் கீழ் அல்லது இயற்கை அனர்த்தத்தின் திட்டத்தின் கீலோ கிராம அலுவலர்கள் மூலமாக அல்லது சமூர்த்தி அலுவலர்கள் மூலமாக அல்லது பிரதேச செயலாளர்களின் மூலமாக இந்த நிவாரணத்தை அன்றாட வாழ்க்கையை மக்கள் எதிர்கொள்ளக் கூடிய நிலைமையிலே வறுமைக்கொட்டுக்கு கீலே வாழுகின்ற அன்றாட வேலைக்கு செல்லுகின்ற மக்களுடைய நிலைமையை கருத்திலே கொண்டு அவர்களுடைய வாழ்வாதார திட்டங்களுக்கு உதவி வழங்குகின்ற நடவடிக்கையை உடனடியாக விரைந்து எடுக்கவேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
வடக்கு மாகாண ஆளுநரிடமும் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் படியும், ஜனாதிபதியின் செயலாளரிடமும் நேரடியாக தொடர்பு கொண்டு இதற்கான தீர்பு ஒன்றினை கானுமாறு அளுத்தம் கொடுக்கின்றோம், வலியுறுத்துகின்றோம், வேண்டி நிற்கின்றோம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!