கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்- 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி.!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா அறிகுறி இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவை அரசு நிறுவனங்களின் ஆய்வகங்களில் மட்டுமே பரிசோதனை செய்யப்படுவதால் ஆய்வு முடிவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனை போக்கும் வகையில், கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்வதற்கு 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.