;
Athirady Tamil News

குழுவாக வந்த ஒருவருக்கு காய்ச்சல்- திருப்பதியில் 109 பக்தர்கள் தனியாக தங்க வைப்பு..!!

0

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து திவ்ய தேசங்களை தரிசிக்க 110 பேருடன் ஒரு குழு ஒரு வாரத்திற்கு முன் கிளம்பியது. இவர்கள் கடைசியாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைல ஷேத்திரத்திற்கு சென்று தரிசனம் முடிந்து திருப்பதி வந்தனர்.

110 பேரும் திருப்பதியில் மாதவம் தங்கும் விடுதியில் தங்கினர். தரிசன டிக்கெட் வாங்கினர். நேற்று மதியம் அவர்களுக்கு ஸ்லாட் முறையில் தரிசனம் செய்ய வேண்டி இருந்தது

ஆனால் கடும் காய்ச்சல் காரணமாக அதில் ஒரு பக்தர் அறையிலேயே தங்கி விட்டார். திருமலையில் தரிசன சமயத்தில் இது அதிகாரிகளுக்கு தெரிந்தது.

உடனடியாக அந்த பக்தரை திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக தெரிய வந்ததையடுத்து தேவஸ்தான உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நோயாளிகளுக்கு வைரஸ் பரிசோதனை முடியும் வரை அவருடன் வந்த 109 பேரையும் திருப்பதியிலேயே வைத்திருக்கவும், அவர்களில் யாருக்காவது வைரஸ் தாக்கியிருந்தால் அவர்களையும் குணப்படுத்திய பிறகே சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டுமென முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையிலேயே திருப்பதிக்கு பக்தர்கள் வருகையை திடீரென நிறுத்திவிட்டு ஒரு வாரம் வரை பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்யும் அதிரடி முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளதாக முதன்மை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*