;
Athirady Tamil News

சீனாவை முந்திய இத்தாலி.. இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கொரோனா இன்றைய அப்டேட்!! (வீடியோ, படங்கள்)

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. இதில் இத்தாலியும், ஈரானும்தான் மிக மோசமாக பாதித்து உள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இத்தாலியில் பலி எண்ணிக்கை சீனாவை முந்தி உள்ளது.

கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. உலகம் முழுக்க இதனால் 246,783 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 10,063 ஐ தொட்டுள்ளது . சீனாவில் தற்போது வரை 80,967 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் 3248 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அங்கு 3 பேர் மட்டுமே இதனால் பலியானார்கள்.

ஆனால் என்ன சீனா மிக கடுமையான சட்டங்கள் மூலம் இந்த வைரஸை கட்டுப்படுத்தி உள்ளது. பல்வேறு நகரங்களை மொத்தமாக மூடி அங்கு மக்களை ஒடுக்கி இந்த வைரஸை அரசு கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அங்கு நிறைய இடங்களை மருத்துவமனைகளாக மாற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக அங்கு வைரஸ் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தாலி எப்படி இந்த கொரோனா வைரஸால் இத்தாலியில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அங்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மிக குறைவாக இருக்கிறது. அதேபோல் தொழில்நுட்ப கருவிகளும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு கடுமையாக திணறி வருகிறார்கள். வீட்டில் பலி வீட்டில் பலி கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்கு உள்ளேயே பலர் பலியாகும் நிலை இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உடலை கூட அரசு வந்து அங்கு எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. கொரோனா காரணமாக இத்தாலியில் 41,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3405 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் பலி எண்ணிக்கை சீனாவை முந்தி உள்ளது.

இறப்பு சதவிகிதம் இத்தாலியில் கொரோனா இறப்பு சதவிகிதம் மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு அரசு மொத்தமாக இதில் தோல்வி அடைந்துள்ளது. அங்கு அரசு தங்களை கைவிட்டுவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இன்னொரு பக்கம் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 18,407 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1284 பேர் இதனால் பலியாகி உள்ளனர். என்ன மறைப்பு என்ன மறைப்பு அதே சமயம் ஈரான் இந்த மரணங்களை மறைத்து வருகிறது. அங்கு 2500க்கும் அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. ஈரான் அதை மறைக்கிறது. அங்கு பல உடல்கள் புதைக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. பல உடல்கள் கருப்பு பைகளில் வையாக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. அதே போல் இன்னொரு பக்கம் தென் கொரியாவில் 8,652 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இதுவரை இந்த வைரஸால் 94 பேர் பலியாகி உள்ளனர்.

தென் கொரியா இந்த வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது. எப்படி பரவியது எப்படி பரவியது தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும்.இந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 9000 பேரில் 4500 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் சர்ச் மூலம்தான் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஸ்பெயினில் வேகமாக கொரோனா பரவி வருகிறது.

அமெரிக்கா நிலை அங்கு 18,077 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 831 பேர் பலியாகி உல்ளனர். அமெரிக்காவில் 14,366 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 217 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் 15,439 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 44 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 10,995 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 372 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால்தான் இதை உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்தியா எப்படி இந்தியா எப்படி இந்தியாவில் 209 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். மகாராஷ்டிராவில்தான் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 3 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று புதிதாக இரண்டு பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் எப்படி தமிழகம் எப்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா அரசு மிக கடுமையாக திணறி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் இதனால் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 15 பேர் இதனால் பாதிக்கப்பட்டுளள்னர. தமிழகத்தில் இருவருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இவர்களுக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது ஸ்டேஜ் 2 கொரோனா வைரஸ் மட்டும் பரவி வருகிறது. எப்படி இது எப்படி இது இரண்டாவது வகை பரவல் ஸ்டேஜ் 2. இது கொரோனா தாக்கி, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபர் ஒருவர் மூலம் அவரின் உறவினர்களுக்கும் வைரஸ் தாக்கினால் அதுதான் ஸ்டேஜ் 2. அதாவது சீனாவில் இருந்து டெல்லிக்கு ஒருவர் வருகிறார். அவருக்கு கொரோனா இருக்கிறது. அவர் மூலம் அவருடைய வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்பட்டால் அது ஸ்டேஜ் 2. இதை local transmission என்று அழைப்பார்கள். உதவி எண்கள் உதவி எண்கள் உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கவும். மருத்துவமனைக்கு தனியாக செல்வதை விட இது சிறப்பு. இதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலவச உதவி எண் : +91-11-23978046 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நான்கு உதவு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.





கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!!

தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!!

முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!

வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!

தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*