22-ந்தேதி அரசு பேருந்துகள் ஓடாது: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் கூடிறியபடி 22-ந்தேதி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரெயில்களும் ஞாயிறன்று இயங்காது.
பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.