செட்டிகுளம் விபத்தில் ஒருவர் சாவு!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
குறித்த முதியவர் நேற்றயதினம் காலை செட்டிகுளம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றுமாலை சிகிச்சை பலனின்றி குறித்த முதியவர் சாவடைந்துள்ளார்.விபத்தில்செட்டிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவராக பணிபுரிந்த துரைவீரசிங்கம் வயது68 என்பவரே சாவடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”