;
Athirady Tamil News

“நல்ல மனுஷன்யா” சூப்பர் சார்.. குஷ்புவே பாராட்டி விட்டார்.. தேங்ஸ் சொன்ன விஜயபாஸ்கர்!! (படங்கள்)

0

“நல்ல மனுஷன்யா.. இப்படி சாப்பிட கூட நேரமில்லாமல் ஓடி, ஓடி காரியங்களை கவனிக்கிறாரே” என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் மிகப்பெரிய கலக்கத்தில் சிக்கி உள்ளது.. யாரை இந்த தொற்று பாதித்திருக்கும்? நம்மளையும் தாக்கிடுமோ, எப்படி இருந்தால் குடும்பத்தோடு தப்பிக்கலாம் போன்ற பயம் நிறைந்த சந்தேக கேள்விகள் ஒவ்வொருவரையும் துளைத்து வருகிறது.

இதுவரை 3 பேருக்கு மட்டுமே இந்த நோய் தொற்று பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது.. எனினும் பலர் கண்காணிப்பில் உள்ளனர்.. இந்த விவகாரத்தை பொறுத்தவரை அரசுக்கு கம்பி மேல் நடப்பது மாதிரிதான்.. உண்மையை அப்பட்டமாக சொன்னாலும் அதை சரியான அர்த்தம், புரிதலோடு அணுகும் மனப்பான்மை எத்தனை பேருக்கு இருக்கும் என தெரியவில்லை.

விழிப்புணர்வு

ஒரு எச்சரிக்கைக்காக கூடுதலாக விஷயத்தை சொன்னாலும் அது ஏகப்பட்ட புரளி, வதந்தியாக பரவி மக்களை இன்னும் குழப்பத்திற்கு ஆளாக்கிவிடுகிறது.. அதனால் தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று குறித்து என்ன நடக்கிறதோ, அதை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார்!

ஏர்போர்ட்கள்

சீனாவில் நோய்த் தொற்று தீவிர நிலையில் இருக்கும்போதே… அதாவது இந்தியாவுக்குள் ஒருவர்கூட பாதிக்காத நேரத்தில், நம்ம ஊரில் கோவை, சென்னை, மதுரை ஏர்போர்ட்டுகளில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்தவர் விஜயபாஸ்கர்.. மிகவும் பொறுப்பான பதவி.. உயிர் காக்கும் விஷயம்.. இயல்பான உயிர்பலி விழுந்தாலும் விஜயபாஸ்கரின் மண்டை உருளும் அளவுக்கு சென்றுவிடும் விவகாரம்!

கிருமிநாசினி

அதே சமயம், துறை வாரியான நடவடிக்கைகளையும் மீறி தன்னை திணித்து கொண்டு முன்னெச்சரிக்கை விவகாரங்களில் இறங்கி வருகிறார் விஜயபாஸ்கர்.. இந்த ஆஸ்பத்திரி, அந்த ஆஸ்பத்திரி என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை.. திடீர் திடீர் என ஆய்வுக்கு செல்கிறார்… பஸ் ஸ்டேண்டுகளுக்கு செல்கிறார்.. ஏர்போர்ட்டுகளுக்கு செல்கிறார்.. கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு வருகிறதா, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்ற ஆய்வுகளை நேரடியாகவே கண்காணிக்கிறார்.

அக்கறை

இதை தவிர செய்தியாளர்களிடம் தினமும் கொரோனா தொற்றின் தீவிரம், தன்மை, பாதிப்பு, நோயாளிகளின் எண்ணிக்ககை, மாநிலத்தின் நிலவரம் என ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்து வருகிறார்.. சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்களில் மட்டுமன்றி, மருத்துவ ஊழியர்களை நேரடியாக களமிறக்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதிலும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.. சட்டசபை கூட்டம், முதல்வர் தலைமையிலான ஆய்வுகூட்டம், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் அனைத்திலும் பங்கேற்கிறார்.

சுறுசுறுப்பு

இந்த செயல்பாடுகளை பார்த்துதான் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரும் சட்டசபையில் பாராட்டு தெரிவித்தனர்.. நடிகர் ரஜினிகாந்த்தும் இதை மனமார பாராட்டினார்… காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி சட்டசபையில் பேசும்போது, “விஜயபாஸ்கர் மிக சுறுசுறுப்பாக செயல்படுகிறார்…. அவர் சீனா நாட்டுக்கும் சென்று உரிய ஆலோசனை வழங்க வேண்டும்”என்றுகூட சொன்னார். அந்த வகையில் நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி போன்றோரும் விஜயபாஸ்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கஸ்தூரி

நடிகை கஸ்தூரி, “சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நெருக்கடி காலகட்டங்களில் தீவிரமாக களமிறங்கி செயல்படுவதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார். சினிமா, டிவி கலைஞர்களின் நலனில் அக்கறை எடுத்து.. உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்… அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நிற்போம்.. ஒற்றுமையாக செயல்படுவோம்” என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.
தேங்ஸ் மேடம்

குஷ்புவின் இந்த பதிவிற்கு விஜயபாஸ்கர் தேங்ஸ் மேடம் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.. இந்த ட்வீட்களுக்கு ஏராளமானோர் பாராட்டும், வாழ்த்தும் விஜயபாஸ்கருக்கு தெரிவித்து வருகின்றனர்… ஒருவர் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார்.. அதில் விஜயபாஸ்கர் ஒரு மண் திட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.. ஒரு டவலை விரித்து அதில் உட்கார்ந்து இட்லி சாப்பிடுகிறார்.

மனித நேயம்

“சாப்பிட கூட நேரமில்லாமல் ஆங்கங்கே உணவருந்துகிறார், தமிழக மக்களை காப்பாற்ற ஓடி ஓடி உழைக்கிறார், உங்களுக்கு தலை வணங்குகிறேன் அய்யா” என்றும் பதிவிட்டுள்ளார். அரசியல் கட்சிகளையும் தாண்டி… விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் வரவேற்பை பெற்று வருகிறது.. இந்த பாகுபாடற்ற வரவேற்பும், ஒட்டுமொத்த மக்களின் மனிதநேயமும் ஒன்றிணைந்தாலே போதும்.. எந்த கொரோனாம் ஓட ஓட விரட்டியடிக்கலாம்!

கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக.. ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது!! (படங்கள்)

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!!

தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!!

முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!

வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!

தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 1 =

*