யாழ். மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளும் தடை செய்யப்படுகிறது – ஆயர் அறிக்கை!!!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆலய செயற்பாடுகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
22ஆம் திகதி ஞாயிறு தினத்தை உபவாச செப தினமாக அனுசரிக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் வேண்டுகோளை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் குருக்கள் துறவியர் மற்றும் இறைமக்கள்
அனைவரும் கட்டாயமாக அனுசரிக்கவும்.
அனைவரும் வீட்டிலிருந்தவாறு தனியாகவோ குடும்பமாகவோ திருச்செபமாலை திருமணித்தியாலம் இறை இரக்கச் செபம் திருச் சிலுவைப்பாதை வியாகுலபிரசங்கம் போன்ற பக்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளவும்.
கண்டியில் அன்று கொள்ளை நோய் வந்தபோது பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றிய இலங்கையின் அப்போஸ்தலர் புனித யோசவ்வாஸ் அடிகளார் மற்றும் மனுக்குலத்தின் தாயாக விளங்கும் தேவதாயரிடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இலங்கை நாடு பாதுகாக்கப்பட உருக்கமாக மன்றாடுங்கள்.
மக்களை ஒன்று கூட்டும் எந்த ஒரு நிகழ்வையும் ஒழுங்கு செய்ய வேண்டாமென பங்குத்தந்தையர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.
இறுதிச் சடங்கு திருமுழுக்கு போன்ற தேவைகளுக்கு பங்குத்தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய ஒழுங்குகளை செய்யவும்.
இப் பயங்கரமான தொற்றுநோய் மேலும் பரவாமல் உலக மக்கள் அனைவரையும் இறைவன் பாதுகாக்கப்பட இறையாசீர் வேண்டுகிறோம் – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!