கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் தனிமைப்படுத்தல் முகாம்!! (படங்கள்)
கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் இந்தியாவுக்கு யாத்திரிகையர்களாகச் சென்ற பிக்குகள் உள்ளிட்ட 233 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
8 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வழங்கள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!