ஊரடங்கு சட்டம் தளர்த்தியவுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வரக்கூடாது.!! (படங்கள்)

மஸ்கெலியா பொது வைத்திய சுகாதார அதிகாரி வைத்தியர் டி.சந்திரராஜன் தெரிவிப்பு.
உலகம் முழுவதும் கொவிட் 19 என்ற வைரஸ் தாக்கத்திற்கு இன்று முகம் கொடுத்து வருகிறது இந்நிலையில் எமது நாடும் இந்த வைரஸ் அச்சுறுததல் பாரிய அளவில் காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் இன்று இதனை கட்டுப்படுத்த ஊரடங்க சட்டத்தினை அமுல் படுத்தியுள்ளது. நாளை தளர்த்திய உடன் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருகை தராது தனித்தனியாக வருமாறும், வைரஸ் பரவாமல் இருப்பதற்கு மூன்று அடி இடைவெளி வைத்துக்கொள்ளுமாறும் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் தெரிவித்தார்.
கோரானா வைரஸ் தொடர்பாக பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக வைக்கப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று இந்த நோய் தாக்கம் பாராதூரமாக காணப்படுகின்றது. இது மக்கள் செறிந்து வாழும் போதும் ஒன்று கூடும் போதும் தான் அதிகளவு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. ஆகவே இந்த சூழ்நிலையில் தங்களை பாதுகாத்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். அப்போது தான் இந்த வைரஸ் தங்களுடைய குடும்பத்திற்கும் ஏனையவர்களுககும் பரவுவதை தடுக்க முடியும் அதே நேரம் இன்று வைரஸ் தாக்கம் காரணமாக பிறக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டதன் பின் வீடுகளுக்கு குறிப்பாக மலையக பகுதிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இவ்வாறு வரும் போது நீங்கள் பஸ்ஸிலோ அல்லது புகையிரத்திலோ அதிக நெறிசலுடன் தான் வருவீர்கள். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கொரானா தொற்று உள்ள ஒருவர் இருந்தால் அது பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தாங்கள் இருக்கும் இடத்திலே குறிப்பிட்ட காலத்திற்கு இருப்பது சிறந்தது.இது கடினமான காரியமாக காணப்பட்ட போதிலும் குடும்பத்தினதும்,நாட்டினதும் நன்மை கருதி இதனை மேற்கொள்ள வேண்டும்.
இதே வேனை மலையக பகுதியில் தொடர் குடியிருப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் இந்த நோய் பரவுவதற்கான் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஆகவே மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தல்களை பின்பற்றி செறிவாக வாழாமல் தனித்தனியாக அல்லது தங்களது குடும்பத்துடன் மாத்திரம் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு விடுமுறை என்பதால் விளையாடுவது களியாட்டங்களை நடவத்துவது போன்ற விடயங்களை செய்யக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!