;
Athirady Tamil News

இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து யாத்திரிகர்களும் நாடு திரும்பினர்!!

0

உள்ளக வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக தனது விமான நிலையங்களை இந்திய அரசு மூடுவதற்கு முன்னர், பிரத்தியேகமான கடைசி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மொத்தமாக 48 பௌத்த யாத்திரிகர்கள் இன்று (22) 05:10 மணிக்கு புதுடில்லியிலிருந்து புறப்பட்ட நிலையில், இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து இலங்கை பௌத்த யாத்திரிகர்களும் தற்போது இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

முன்னராக இன்றைய தினம் சென்னையிலிருந்து 03:00 மணிக்கு புறப்பட்ட மற்றுமொரு பிரத்தியேக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 97 பௌத்த யாத்திரிகர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்ததுடன், மொத்தமாக 145 யாத்திரிகர்கள் மார்ச் 22 ஆந் திகதி இலங்கைக்கு நாடு திரும்பினர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யு.எல். 196 மூலமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 21ஆந் திகதி 19:31 மணிக்கு மொத்தமாக 298 யாத்திரிகர்கள் புதுடில்லியிலிருந்து புறப்பட்டனர்.

உள்நாட்டு வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக இலங்கை விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த நேரத்தில், இந்தியாவில் சுமார் 1500 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் இருந்தனர். அப்போதிலிருந்து, முன்னர் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக விமானங்கள் மூலமாகவும், பின்னர் சிக்கித் தவித்த யாத்திரிகர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்காக செயற்படுத்தப்பட்ட பிரத்தியேக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் மூலமாகவும் இந்த யாத்திரிகர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில், புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, யாத்திரிகர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதற்கான வசதிகளை வழங்குவதற்காக புதுடில்லி மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுடனும், மற்றும் சுற்றுப்பயணக் குழுக்களுடனும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டன. யாத்திரிகர்களின் டிக்கெட்டுக்களை மறுசீரமைத்தல், மற்றும் டில்லி மற்றும் சென்னையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் வழங்கப்படும் உதவிகள் ஆகியன இந்த முயற்சிகளில் உள்ளடங்குகின்றன.

சிக்கித் தவித்த யாத்திரிகர்களை வெற்றிகரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு உதவியமைக்காக, வெளிவிவகார அமைச்சு மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய அரசின் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், டில்லி மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்கள், இந்தியாவிலுள்ள இலங்கையின் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த யாத்திரிகத் தளங்களில் வசிக்கும் மரியாதைக்குரிய துறவிகள் மற்றும் புதுடில்லியிலுள்ள இலங்கை பௌத்த யாத்திரிகர்களின் ஓய்வு இல்லங்கள் ஆகியவற்றுக்கு புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன தமது ஆழ்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!!

தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!!

முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!

வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*