கொரோனாவுக்காக அம்பாறையில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடை!! (படங்கள்)
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வோருக்கான புதிய சீருடை ஒன்று அம்பாறை அரச மருத்துவமனை மருத்துவக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் கழிவாக அகற்றக்கூடிய பொலித்தீன் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை ஒருமுறை மாத்திரமே இதனை பயன்படுத்த முடியும் .
அம்பாறை வைத்தியசாலையில் கொரோனா கட்டுப்பாட்டு பிரிவினால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு அவசியமான ஆடைகளை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இலகுவில் உக்கும் பொலித்தீன் பையை பயன்படுத்தி இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஆடையை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும் என அம்பாறை வைத்தியசாலையின் நுண்ணுயிர் பிரிவு வைத்தியர் தர்ஷன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த ஆடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த ஆடையை அம்பாறை வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்க கூடிய ஆரம்ப சிகிச்சை வழங்குவதற்காக அம்பாறை வைத்தியசாலையில் பல இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”


கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!