சார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை!!

கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சார்க் அவசர நிதிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
மார்ச் 15 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) காணொளி மாநாட்டில் இந்த நிதியம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.