18 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள் !! (படங்கள்)
வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்
வவுனியாவில் மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 18 குடும்பத்தினருக்கு பல நண்பர்கள் இணைந்து இன்று (23.03.2020) மதியம் 12.30 மணயளவில் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன் அவர்களின் வேண்டுகோளிக்கினங்க பல நண்பர்கள் இணைந்து ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ , கோதுமை மா 5 கிலோ , சீனி 1 கிலோ , பருப்பு 1 கிலோ , பூடு 250 கிராம் , தேயிலை 200 கிராம் , சோயா 500 கிராம் , டின் மீன் 1பெரிது , சமபோசா பெரிது , உப்பு 1 கிலோ , கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 18 குடும்பத்தினருக்கு 36,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக வவுனியா விஸ்காடு , பாரதிபுரம் , சாம்பல் தோட்டம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட (அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும்) 18 குடும்பத்திரை தெரிவு செய்து கனவுகள் அமைப்பு தர்சிகன் , வவுனியா பொறியியலாளர் தயா ஆகியவர்களின் மிகப்பெரும் நிதி பங்களிப்புடனும் நெளுக்குளம் நதீபன் , மஞ்சு சாரதி பயிற்சி நிலைய உரிமையாளர் மஞ்சு , பீட்டா தனியார் பல்கலைக்கலைக்கழகத்தின் உரிமையாளர் விஐீதரன் , வீரபுரம் ஊடகவியலாளர் சஐீவன் , வங்கி ஊழியர் மயூரன் , நிதி நிறுவன உத்தியோகத்தர் சுஜேஸ் ஆகியோரின் நிதிப்பங்களிப்பிலும் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
ஊரடங்கு சட்டம் காரணமாக மூன்று தினங்களும் ஒர் நாளைக்கு ஒர் வேலை மாத்திரம் உணவு மாத்திரம் சாப்பிடும் இரண்டுக்கு மேற்பட்ட குடும்பத்தினரும் இவ் உதவித்திட்டத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!