;
Athirady Tamil News

நாளுக்கு நாள் வேகமாக பரவுகிறது- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 415 ஆக உயர்வு..!!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பால் 3 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் வைரசின் தாக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.

கடந்த சனிக்கிழமை 77 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 68 பேருக்கும் என 2 நாட்களில் மட்டும் 145 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 89 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே உறுதி செய்தார்.

மும்பை கல்யாணில் அமெரிக்காவில் இருந்து வந்த நபர், கொரோனா இருப்பது தெரியாமலேயே சுமார் 1000 பேருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர் ரெயிலில் பயணம் மேற்கொண்டதுடன் திருமணம் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

புனேவில் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது மகன், சகோதரி உள்பட குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

துபாயில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு வந்த நபர் ஒருவர் கொரோனா பரிசோதனையை தவிர்த்த நிலையில் அவர் மூலமாக அவரது குடும்பத்தினர் இருவருக்கும் வைரஸ் பரவி உள்ளது. அவரது கடையில் பணிபுரியும் 8 பேருக்கும் அறிகுறி கண்டறியப்பட்டுள் ளது.

குஜராத்மாநிலத்தில் மேலும் 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய ஆந்தி ராவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி வெகு விமரிசையாக திருமணம் செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வரை கலந்து கொண்டதால் அம்மாநில அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.

டெல்லியில் 30 பேருக்கும், கேரளாவில் 67 பேருக்கும், ராஜஸ்தானில் 28 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 9 பேர், பீகாரில் 2 பேர், அரியானாவில் 7 பேர், இமாசலபிரதேசத்தில் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கர்நாடகாவில் 26 பேருக்கும், மத்திய பிரதே சத்தில் 4 பேருக்கும், ராஜஸ் தானில் 22 பேருக்கும், பஞ்சாபில் 21 பேருக்கும் என 23 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சளி, காய்ச்சல் இருப்பவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + nine =

*