;
Athirady Tamil News

கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பான பட்டியல் – மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்..!!!

0

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிறைகளில் அதிகமானவர்களை அடைத்து வைப்பதால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்காமல் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் குழு ஒன்றை அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ளது.

7 ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் மற்றும் 7 ஆண்டுகள் வரை தண்டிக்கும் குற்றப்பிரிவின்கீழ் சிறைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களை 4 முதல் 6 வாரங்கள் வரை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில சட்டச்சேவை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*