;
Athirady Tamil News

கொரோனா பீதி: நாளை நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானச் சேவைகள் நிறுத்தம்..!!!

0

கொடிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 15 ஆயிமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 428 ஆக அதிகரித்து, பலி எண்ணிக்கையும் 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில் நாளை (24-ம் தேதி) நள்ளிரவு 11.59 முதல் உள்நாட்டு விமானச் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டு சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 19 =

*