;
Athirady Tamil News

தந்தை இறுதிச்சடங்கில் மகன் பங்கேற்க முடியாத பரிதாபம்..!!!

0

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், தெனு கந்தி கோர்லு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் ராவ். இவருக்கு வெங்கடராம் பிரசாத் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

வெங்கடராம் பிரசாத் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கோபால் ராவ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள வெங்கடராம் பிரசாத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரால் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை.

இதனால் தந்தை இறுதிச்சடங்கில் வெங்கடராம பிரசாத் பங்கேற்க முடியாத பரிதாபமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோபால் ராவின் இறுதிச் சடங்கை அவரது மகள் லட்சுமி செய்தார்.

இதை வெங்கடராம பிரசாத் அமெரிக்காவில் இருந்து வீடியோவில் பார்த்தது உறவினர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 4 =

*