;
Athirady Tamil News

செட்டிக்குளம் பிரதேச சமூர்த்தி வங்கியில் தமிழர்கள் புறக்கணிப்பு!! மக்கள் குற்றச்சாட்டு!

0

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சமூர்த்தி வங்கியில் இன்று (24) பணம்; பெற்றுக்கொள்ள சென்ற தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று நாட்களாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று காலை நீக்கப்பட்ட நிலையில் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்திவரும் மக்களை கருத்தில் கொண்டு சமூர்த்தி வங்கிகளினூடாக 3500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. குறித்த கொடுப்பனவு செட்டிக்குளம் பிரதேச தமிழ் மக்களுக்கு வழங்காது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்டியாபுளியங்குளம், சிப்பிக்குளம், மெனிக்பாம், மீடியாபாம், வாழவைத்தகுளம், புதுக்குளம், கிறிஸ்தவகுளம், நேரியகுளம், முதலியார்குளம், முட்டுவா மற்றும் சண்முகபுரம் போன்ற கிராமங்கள் குறித்த சமூர்த்தி வங்கியின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சொந்த வாகனங்களிலும், வாடகைக்கு வாகனங்களை அமர்த்தியும் செட்டிக்குளம் பிரதேச சமூர்த்தி வங்கிக்கு சென்ற தமிழ் மக்களுக்கு சமூர்த்தி பணம் வழங்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக விசனம் வெளியிட்டனர்.

இன்று காலை எட்டு மணிமுதல் 11.00 மணிவரையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தமிழ் பேசும் சகோதர இனத்தவர் நூறு பேருக்கு மாத்திரம் சமூர்த்தி பணம் வழங்கப்பட்டதாகவும் குறித்த கிராமங்களில் தமிழர் எவரும் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படாமையே இந்த அவலத்திற்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டனர். சேட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர் தெரிவில் இன விகிதாசாரம் கணக்கில் எடுக்கப்படாமல் அரசியல் நியமனங்களே இவ்வாறு தமிழ் மக்கள் புறக்கணிக்கபடுகின்றமைக்கு காரணம் என தெரிவிக்கும் மக்கள் சாப்பிடவே வழியில்லாமல் தவிக்கும் எமக்கு அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eleven =

*