சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 12பேர் நேற்று முன்தினம் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று முன்தினம் மாலையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!