;
Athirady Tamil News

கொரோனா: தமிழகத்தில் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா தாக்குதலை தடுக்க தமிழகத்தில் இன்று மாலை முதல் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இத்தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு ஏப்ரல் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

எந்த ஒரு இடத்திலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது
அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் எதுவும் இயங்காது
தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளும் மூடப்படும்.
அரசு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மார்ச் 31-ந் தேதி வரை பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் இயங்கும்.
மளிகை கடைகள், உணவகங்கள் செயல்படலாம். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை.
பால், கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லலாம்
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையை தவிர்த்த பிற வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வ்வைக்கப்படுகிறது.

144 தடை உத்தரவை அமல்படுத்த அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் சாலைகளில் நடமாடுவோர் கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்! (படங்கள்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − four =

*