;
Athirady Tamil News

பேபிம்மா… என்ன பண்றீங்க.. கையைக் கழுவப் போறேன் டாடி.. அசத்தல் வார்னர்! (வீடியோ)

0

கொரோனாவைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி அதிகரித்து வரும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குட்டி மகளுக்கு கை சுத்தம் பற்றி போதித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவரும் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக வீட்டோடு இருக்கிறார். வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாரையும் போல கொரோனா விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்தபடி உள்ளார்.

அந்த வகையில் தனது மகளுக்கு கை சுத்தம் பற்றி அவர் போதித்த காட்சி அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.

வார்னரும் அவரது மகளும் அந்த வீடியோவில் டேவிட் வார்னின் குட்டி மகள் தனது கையில் சானிட்டைசரை ஊற்றி கையை சுத்தம் செய்கிறார். அதை பக்கத்தில் இருந்தபடி வீடியோ எடுக்கும் வார்னர், கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறுகிறார் மகளிடம். அந்த குட்டி தேவதையும் அழகாக கேட்டபடி கையை படு அம்சமாக சுத்தம் செய்கிறது.

சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கையைக் கழுவ வேண்டும். அப்படி செய்தால்தான் எதுவும் நம்மைத் தாக்காது. எனவே நாம் கை சுத்தத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று வார்னர் தனது மகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அந்தக் குட்டி பாப்பாவும் சமர்த்தாக கேட்டுக் கொள்கிறது. பார்க்கவே அழகாக இருக்கிறது இந்த வீடியோ.

சோயிப் அக்தர் போட்ட டிவீட் அதேபோல பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரின் டிவிட்டர் பதிவு ஒன்று கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அதாவது கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மற்றும் நர்ஸ் ஒருவரின் புகைப்படம் அதில் உள்ளது. நீண்ட நேரமாக இரவும் பகலாக வேலை பார்த்து வரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களின் புகைப்படத்தை சோயிப் அக்தர் ஷேர் செய்துள்ளார். டாக்டர்கள், நர்சுகளுக்கு மரியாதை டாக்டர்கள், நர்சுகளுக்கு மரியாதை இவர்கள் முகத்தில் மாஸ்க்கை மாட்டியபடியே தொடர்ந்து பணியாற்றி வருவதால் இவர்களின் முகத்தில் காணப்படும் அடையாளக் குறி பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாருங்கள். தொடர்ந்து நீண்ட நேரமாக பணியாற்றியதன் சோர்வை முகம் காட்டுகிறது. ஆனாலும் இவர்களின் பணி நிற்கவில்லை என்று கூறி அவர்களுக்கு ஹார்ட்டின் போட்டுள்ளார் சோயிப் அக்தர். நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பகீர் ஒற்றுமை.. கொரோனாவால் மரணித்த 10 பேர்.. அதிர வைக்கும் தகவல்கள்.. ரொம்ப கவனமா இருங்க மக்களே!!

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்! (படங்கள்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − one =

*