;
Athirady Tamil News

ஷூட்டிங் இல்லை… வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ..!! (வீடியோ, படங்கள்)

0

ஊரடங்கு நாளன்று வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் செய்துள்ள ஹீரோவின் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் இயக்கிய தியா மூலம் தமிழில் அறிமுகமானவர், நாக சவுரியா. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாக சவுரியா, நர்த்தனசாலா, அஸ்வத்தமா, சலோ ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார்.

தமிழகத்தில்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு ரத்து

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நடிகர், நடிகைகள் வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி

இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

உருப்படியாக

அதன்படி, இந்தியா முழுவதும் நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 வரை வீட்டுக்குள்ளேயே இருந்தனர். இந்நிலையில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக உருப்படியாக ஒரு வேலை செய்திருக்கிறார், ஹீரோ நாக சவுரியா. அதாவது அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார், நாக சவுரியா.

மாங்காய் ஊறுகாய்

ஊரடங்கு நாளான நேற்று சினிமா நட்சத்திரங்கள், குடும்பத்துடன் நேரத்தை எப்படி செலவிட்டார்கள் என்று வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். இதில் நாகசவுரியா மாங்காய் ஊறுகாய் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அம்மாவிடம் இருந்து மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.


பகீர் ஒற்றுமை.. கொரோனாவால் மரணித்த 10 பேர்.. அதிர வைக்கும் தகவல்கள்.. ரொம்ப கவனமா இருங்க மக்களே!!

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்! (படங்கள்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 2 =

*