;
Athirady Tamil News

தடுப்பு காவலில் இருந்த காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா விடுவிப்பு..!!

0

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ- வை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதோடு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மெகபூபா முப்தி ஆகியோர் தடுப்பு காவலில் (வீட்டு சிறைவாசம்) வைக்கப்பட்டனர்.

பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோர் பொது பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்தச் சட்டம் ஒருவரை கைது செய்து விசாரணையின்றி 3 மாதங்கள் வரை காவலில் வைக்க அதிகாரம் உண்டு. மேலும் இந்த காவலை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரூக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − four =

*