;
Athirady Tamil News

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன்.. மோடி அதிரடி அறிவிப்பு!!

0

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவியதை அடுத்து கடந்த19ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் மோடி. அப்போது 22 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மாலை 5 மணிக்கு கைதட்டி மருத்துவ மற்றும் பிற சேவைகளில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கேட்டுக்கொண்டார். ஒட்டுமொத்த நாடும் அப்படியே பின்பற்றியது. ஆனால் மறுநாள் முதல் மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினர். இவ்வாறு மக்கள் அரசு சொல்வதை கேட்காமல், நடந்து கொள்வது சரியல்ல என்று பிரதமர் மோடி நேற்று ஆதங்கம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு அவர் மறுபடியும் தொலைக்காட்சியில், உரையாற்ற தொடங்கியுள்ளார். மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு பற்றி பேச வந்துள்ளேன். பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், வியாபாரிகள் எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

சமூக விலகல்தான் இந்த வியாதியை விரட்டும் ஒரே வழி. ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒத்துழைப்பு தர நான் அழைப்பு விடுக்கிறேன். கொரோனா வைரஸை, விளையாட்டாக நினைக்காதீர்கள். அது யாரையும் விட்டுவைப்பதில்லை, நம்மை தாக்காது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நோயாளிகளுக்கு மட்டும்தான் சமூக விலகல் என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சமூக விலகல் என்பது அனைத்து குடிமக்களுக்குமானது. எனவே, இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்படும். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக தான். இந்த லாக்டவுன், என்பது ஜனதா ஊரடங்கு மாதிரி இல்லை. அதைவிட கடுமையாக பின்பற்றப்படும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த லாக்டவுன் அமலில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + one =

*