;
Athirady Tamil News

கொரோனா சிகிச்சைக்காக மீன் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனத்தை உட்கொண்ட தம்பதி… கணவர் மரணம்..!!

0

கொரோனா சிகிச்சைக்காக மீன் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் ஒன்றை உட்கொண்ட அமெரிக்க தம்பதியரில், கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்ற வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது hydroxychloroquine என்ற மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து, கொரோனா சிகிச்சைக்கு ஏற்றது என்று கூறியிருந்தார்.

அது கடவுள் கொடுத்த வரம், வாழ்க்கையையே மாற்றி விடும் என்றெல்லாம் அந்த மருந்தை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்திருந்தார் ட்ரம்ப்.

இந்நிலையில், ஒரு அமெரிக்க தம்பதியர் தங்கள் வீட்டில் மீன் தொட்டியை சுத்தம் செய்யும் ரசாயனம் ஒன்றிலும் chloroquine phosphate என்ற பொருள் இருப்பது கண்டு, அதை உட்கொண்டுள்ளனர்

ஆனால், அந்த ரசாயனத்தை உட்கொண்ட அரை மணி நேரத்தில் அவர்களது நிலைமை மோசமாக, அவர்கள் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். என்றாலும், சிகிச்சை பலனின்றி அந்த கணவர் இறந்துபோனார்

அவரது மனைவி அபாய கட்டத்தில் மருத்துவமனையில் உள்ளார். இதைத் தொடர்ந்து, மக்கள் யாரும் தங்களுக்குத் தாங்களே சிகிச்சையளித்துக்கொள்வதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*