கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரை 2 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி தற்போது நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 99 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐடிஎச் வைத்தியசாலையில் 88 பேரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 10 பேரும் மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 255 பேர் நாட்டின் 21 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!