வவுனியாவில் 13 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!! (படங்கள்)
வவுனியாவில் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!!
வவுனியாவில் ஜந்து நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 13 குடும்பத்தினருக்கு கனவுகள் அமைப்பினரினால் இன்று (23.03.2020) மதியம் 12.30 மணியளவில் உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளிக்கிணங்க கனவுகள் அமைப்பினரினால் ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 13 குடும்பத்தினருக்கு 26,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா தங்கநகர் , தவசிகுளம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட (அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும்) 13 குடும்பத்திரை தெரிவு செய்து கனவுகள் அமைப்பினரின் நிதி உதவியில் ஊடகவியலாளர் சஜீவன் , கனவுகள் அமைப்பின் சார்பாக தர்சிகன் , கனீஸ்ரன் , சமூக ஆர்வளர் நந்தினி ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
ஊரடங்குச் சட்டம் காரணமாக ஜந்து தினங்களும் சோறும் ஒரு கறியும் மாத்திரம் சாப்பிடும் மூன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினரும் இவ் உதவித்திட்டத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!