;
Athirady Tamil News

காபூல் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 பேர் உயிரிழப்பு..!!!

0

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் நிறுத்தி உள்ளனர்.

அதேசமயம் அரசுப் படைகளை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் மீதான தாக்குதலுக்கும் தலிபான்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், காபூலில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.

தாக்குதலில் சேதமடைந்த குருத்வாராவின் உள்பகுதி

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குருத்வாராவில் இருந்த 27 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தவித்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்து மற்றும் சீக்கியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 4 =

*