வவுனியாவில் 137 பேர் சுய தனிமைபடுத்தலில்!!

கொரனா வைரஸ்தாக்கம் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன் அவர்களில் 137 பேர் சுஜ தனிமைபடுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் செட்டிகுளம் பிரிவில் 17 பேரும், வவுனியாவடக்கில் 8 பேர் மற்றும் யாழில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட8 பேர் உட்பட 137 பேர் சுஜ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட வெளிநாட்டில் இருந்து வருகைதந்த விமானபயணிகள் 538 பேர் வவுனியா மாவட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில்212 பேரும், பெரியகட்டு இராணுவமுகாமில் 120 பேரும்,பூவரசங்குளத்தில்206 பேரும் என 538 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!