;
Athirady Tamil News

சமூக விலகல் ஒருபுறம்… அலட்சியம் ஒருபுறம்- கொரோனாவை விரட்ட ஊரடங்கு கைகொடுக்குமா?..!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் வைரஸ் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்படும். இதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு இடங்களில், கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் மக்கள் அலட்சியமாக உள்ளனர். தேவையின்றி சாலைகளில் நடமாடுவதை காண முடிகிறது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் கூட்டமாக பொருட்கள் வாங்கும் மக்களையும், வியாபாரிகளையும் போலீசார் விரட்டியடித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க சமூக விலகல் தொடர்பாக பல்வேறு இடங்களில் மக்களிடையே பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் காண முடிகிறது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகளின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் கூட்டமாக வருவதை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு மீட்டர் இடைவெளியில் வருவதற்கு ஏதுவாக கோடுகள் போட்டும், வட்டம் போட்டும் வைத்துள்ளனர். அந்த எல்லைகளுக்குள் பொதுமக்கள் வரத் தொடங்கி உள்ளனர். இதேபோல் சமூக விலகல் தொடர்பான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

ஓரிரு நாட்கள் இந்த எல்லைக்குள் மக்கள் வர பழகிவிட்டால், பின்னர் அதுவே வழக்கமாகிவிடும். தாங்களாகவே சமூக விலகலை கடைப்பிடிப்பார்கள். இவ்வாறு அனைத்து பகுதிகளிலும் மக்கள் தாங்களாகவே முன்வந்து சமூக விலகலை கடைப்பிடித்தால் கொரோனா நோய்த்தொற்று குறைந்துவிடும்.

கொரோனாவை விரட்ட இந்த 21 நாள் ஊரடங்கு கைகொடுக்குமா? என்பது மக்கள் கையில்தான் உள்ளது. மக்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 16 =

*