கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி கூடியது!! (படங்கள்)
கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் பி.ப 4 மணியளவில் இன்று கூடியது.
தற்போது உலகத்தையே பாரிய அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் காரணமாக நாடு பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் சந்தைகளில் எவ்வாறு சன நெரிசலில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் சன நெரிசலை குறைப்பது தொடர்பாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் கிராமங்களில் நிகழும் மரணச் சடங்குகள் நிறைவுற்ற பின்னர் அவ்விடம் சென்று தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மற்றும் குடிநீர் தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றுவது தொடர்பிலும் இன்று ஆராயப்பட்டது.
விசேட செயலணியில் கலந்து கொண்டவர்களுக்கான இருக்கைகளும் மூன்று அடிக்கு ஒன்று என்னும் விதத்தில் ஒதுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!