முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையால் நடமாடும் மருத்துவ சேவை!! (படங்கள்)
முல்லைத்தீவு நகரில் உள்ள பிரதேச வைத்தியசாலையால் நடமாடும் மருத்துவ சேவையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா சிரேஸ்ட தாதியர் தர்மராசா சுகிந்தராசா, மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி ஆகியோர் தங்களது வைத்தியசாலையில் மாதாந்த மருத்துவ சேவை (கிளினிக்) பெறுவோருக்கு நடமாடும் சேவை மூலம் ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று பரிசோதித்து அவர்களுக்குரிய மருந்துகளை இன்று(25.03.2020) முதல் வழங்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்புலவு , கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு இந்த வைத்திய சேவை வழங்கபடவுள்ளது.
இதன்படி இன்று( 25.03.2020 ) உண்ணாப்புலவு , கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்று தங்களது மாதாந்த மருத்துவ சேவை (கிளினிக்) வழங்கியுள்ளனர்.
நாட்டில் கொவிட் 19 தொற்று தடுப்புக்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் வைத்தியசாலைக்கு வர முடியாத நோயாளர்களுக்கு குறித்த வைத்தியசாலையில் கிளினிக்கு வரும் நோயாளர்களுக்கும் சிரமத்தை போக்கும் நோக்கோடு வீடு தேடி சென்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!