;
Athirady Tamil News

வவுனியா கற்குளி பகுதியில் மக்கள் உணவுக்காக உதவி கோரியுள்ளனர்!! (படங்கள்)

0

வவுனியா கற்குளி பகுதியில் புகையிரத வீதிக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் உணவுக்காக உதவி கோரியுள்ளனர்!

கூலித் தொழிலாளர் ஆகிய எங்களுக்கு நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என ஆதங்கம்!!
வவுனியா புகையிரதப்பாதை ஓரமாக வசித்துவரும் மக்கள் கூலித் தொழில் புரியும் எங்களுக்கு நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் காரணமாகவும் கொரோனா தொற்று பரவாமலிருப்பதற்காகவும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வரும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கற்குளி பகுதியில் புகையிரதப்பாதைக்கு அருகாமையில் வசித்துவரும் மக்கள் தங்களுக்கு நிவாரணங்களோ, உதவிகளோ கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நாளாந்தம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்திவரும் எமக்கு ஊரடங்கு சட்டத்தினால் உணவு கிடைப்பது அரிதாக இருப்பதாகவும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் கணவனை இழந்த பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பல உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.
உணவுக்கு கஸ்ரப்படும் தங்களுக்கு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*